For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதல்முறை.. மின் விபத்தை தடுக்க புதிய முறை.. செந்தில் பாலாஜி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மின் கம்பி அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்த மின் மாற்றிகளில் சென்சார் மீட்டர் பொருத்தப்படும் என மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மின் கம்பங்கள், கம்பிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. வெளிநாடுகளில் கம்பம், கம்பி இல்லை. அதேபோல் புதைவடம் அமைக்கும் திட்டம் உள்ளதா? என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக மின்வாரியத்தில் முதல்முறையாக, மின்மாற்றிகளில் மீட்டர் பொருத்துவதற்கான அனுமதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்

Fact Check: மின் கட்டணம் அப்டேட் ஆகல..இணைப்பு துண்டிப்பு..சமூக ஊடகங்களில் பரவும் கடிதம்..உண்மை என்ன? Fact Check: மின் கட்டணம் அப்டேட் ஆகல..இணைப்பு துண்டிப்பு..சமூக ஊடகங்களில் பரவும் கடிதம்..உண்மை என்ன?

சென்சார் வசதி

சென்சார் வசதி

மின் வழித்தடங்களில் ஏதேனும் பகுதிகளில் மின் கம்பிகள் திடீரென எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்துவிடுகிறது. அப்படியான நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில், உடனடியாக மின் விநியோகம் துண்டிக்கப்படும் சென்சார் வசதி அதில் உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்படும் இந்த மீட்டருக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி நடைபெறும்.

டெண்டர்

டெண்டர்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 7 மண்டலங்களில் புதைவடங்கள் அமைக்கின்ற பணிகளுக்கான டெண்டர் கோரப்படும் பணிகள் நிலுவையில் இருக்கிறது. படிப்படியாக மாநகராட்சி பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் அந்த பணிகள் செய்யப்பட உள்ளது-

மின் நிலையம்

மின் நிலையம்

புதுக்கோட்டை, மனமுடை துணை மின் நிலையத்திற்கான மதிப்பீடு ரூ.5 கோடியே 46 லட்சம், சின்னையா சத்திரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான மதிப்பீடு ரூ.10 கோடியே 63 லட்சம் என மதிப்பிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும்" என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

எம்எல்ஏ கேள்வி

எம்எல்ஏ கேள்வி

முன்னதாக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கீழ்வேளூர் வி.பி. நாகை மாலி(மார்க்சிஸ்ட்) பேசும் போது, "வாழக்கரை ஊராட்சி தெற்கு தெருவில் மின் கம்பத்துடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் ''கடந்த 2016 - 21ம் ஆண்டுகளில் 51 ஆயிரத்து 729 தெருவிளக்கு மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டது.2021 - 23 பிப்ரவரி வரை 48 ஆயிரத்து 779 தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. எனவே உறுப்பினர் நாகைமாலி, தெருவிளக்கு அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு ஊரக உள்ளாட்சி துறை மூலம் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வழங்கக்கூடிய நிலையில் மின் இணைப்புகள் வழங்கப்படும் " என்றார்.

English summary
For the first time in India, sensor meters will be installed in power transformers to stop the power supply immediately if the power line goes down, said Minister Senthil Balaji.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X