For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனியில் ஒரு வாரமாக எரிந்த காடு.. கண்டுகொள்ளாத அரசு.. 9 பேர் உயிரை பறித்த காட்டு தீ

தேனியில் நேற்று மட்டும் இல்லாமல் கடந்த ஒருவாரமாக காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்கணி வனத்திற்குள் அனுமதி பெறாமல் வந்ததே விபத்திற்கு காரணம்- வீடியோ

    தேனி: தேனியில் நேற்று மட்டும் இல்லாமல் கடந்த ஒருவாரமாக காட்டு தீ ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பகுதியில் இந்த தீ பரவி இருக்கிறது.

    தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

    இந்தவிபத்தில் இது வரை 8 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

    8 நாட்கள்

    8 நாட்கள்

    இந்த தீ ஏற்பட்டு 8 நாட்களுக்கும் அதிகமாகிறது. முக்கால்வாசி காட்டுப்பகுதியில் இந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவி இருக்கிறது. என்ன காரணத்தினால் இந்த தீ ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை.

    எங்கே

    எங்கே

    குரங்கணி பகுதியில் மட்டுமே தீ ஏற்பட்டது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தேவராம் பொட்டிபுரம் மலைப்பகுதிகளிலும் தீ ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 30 கிமீ காட்டுப்பகுதியில் இந்த தீ ஏற்பட்டு இருக்கிறது.

    அணைக்கவில்லை

    அணைக்கவில்லை

    இந்த தீயை அணைக்க வனத்துறை பல முயற்சிகள் எடுத்துள்ளது. ஆனால் எந்த விதமான முயற்சிகளும் பயனளிக்கவில்லை. 8 நாட்களாக தீ அணைக்கப்படாத காரணத்தால் தொடர்ந்து பரவிக் கொண்டே இருந்துள்ளது.

    பிரச்சனை

    பிரச்சனை

    இந்த பிரச்சனையே இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு காரணமாக மாறியுள்ளது. இவ்வளவு மோசமாக இருக்கும் காட்டுப்பகுதிக்கு அந்த மாணவிகளும், பொதுமக்களும் யாருடைய அனுமதியும் இல்லாமல் முறைகேடாக சென்று இருக்கிறார்கள். இதுவும் மரணத்திற்கு காரணமாகி இருக்கிறது.

    English summary
    Wild fire strikes in Theni kills 8 girl student. 25 more college girl rescued from inside the fire area. Temporary helipad construction goes on for rescue operation in Theni Forest Fire.Forest Fire is continuously affecting the Theni Forest area for past one week.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X