நீங்க வந்தா மட்டும் போதும்! நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு இலவச டிக்கெட்! ஸ்வீட், ஸ்நாக்ஸ் வேற..!
திருப்பத்தூர் : திமுக இளைஞரணி தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதோடு, இனிப்பு காரம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Recommended Video
கனா படத்தின் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் மே 20ஆம் தேதியான நேற்று தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி படம்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் காட்சி அமைப்பு, அனல் தெறிக்கும் வசனங்கள் என படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருப்பது உதயநிதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த படத்தின் வெற்றியால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலரும் பாராட்டு
மேலும் பல தியேட்டர்களில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி திமுக அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்களும் பொது மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் திருமகள் திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு திருப்பத்தூர் ரசிகர் நற்பணி மன்ற நகர தலைவர் தமிழ் மணியின் சொந்த செலவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி அனைத்து நகர மன்ற உறுப்பினர்களுக்கும் இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

டிக்கெட் இலவசம்
அப்போது திருப்பத்தூர் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக திரைப்படத்தை காண அழைக்கப்பட்டார். மேலும் இத்திரைப்படம் வெள்ளி விழா காண வேண்டும் என்பதற்காக இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திரைப்படத்தை காண வரும் பொதுமக்களுக்கு சுமார் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இனிப்பு, மரக்கன்றுகள்
திரைப்படத்தை காண அனுமதிச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது மட்டுமின்றி மரக்கன்றுகள் இனிப்புகள் கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திரைப்படத்தை காண சென்றனர். காலை காட்சி மட்டும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதிச் சீட்டு இரண்டாவது நாளாக இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள், சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications