For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழுசா "காவி"க்கு மாறிய அதிமுகவை பாருங்க!

ஜெயலலிதாவிற்கு பிடித்த பச்சை இப்போது பாஜகவின் நிறமான காவியாக மாறியுள்ளதை பலரும் விழி விரியப் பார்க்கிறார்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    காவி நிறத்துக்கு மாறிய அதிமுக !!!-வீடியோ

    சென்னை: புதிதாக காவி கலருக்கு மாறி வருகிறது தமிழக நிகழ்ச்சி பற்றிய அரசின் அறிவிப்பு விளம்பரங்கள். இந்த கலர் மாற்றம் பற்றி ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    முதல்வர் ஜெயலலிதாவுக்கு பச்சை கலர் மிகவும் பிடித்தது. இதனால், எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் பச்சை கலர் தான் பயன்படுத்துவார். பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சிக்கு வௌியில் செல்லும் போது கூட பச்சை கலர் சேலை உடுத்துவார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு பின்னணி நிறம் பச்சை நிறமாகவே இருக்கும்.

    இந்த நிலையில் டெங்கு விழிப்புணர்வு குறித்த தமிழக அரசின் அறிவிப்பு காவி நிறத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    கலர் மாறியதே

    கலர் மாறியதே

    ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓபிஎஸ், அவருக்குப் பின்னர் ஈபிஎஸ் என முதல்வர் மாறினாலும் இதுநாள் வரை அப்படித்தான் இருந்தது. இப்போது கலர் மாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முதல்வர் விழா நிகழ்ச்சி

    பச்சை டூ காவி கலர் மாறியதன் பின்னணி என்று கேட்கிறார் ஒரு நெட்டிசன்.

    ஆளுநர் பதவியேற்பு கார் பாஸ்

    புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கான கார் பாஸ்களும் காவி நிறத்திலேயே உள்ளன. புதிய ஆளுநர் வருகைக்கும் நிற மாற்றத்துக்கும் தொடர்புள்ளதா என்று கேட்கின்றனர் சிலர்.

    அதிமுகவை பாருங்க

    முழுசா பிஜேபியா மாறியிருக்குற அதிமுகவை பார் # பச்சை டூ காவி என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

    ஜெ.வுக்கு மாறாக

    ஜெயலலிதா க்கு பிடித்த பச்சை மோடிக்கு பிடித்த காவியாக மாறியது என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர். புதிய ஆளுநர் தமிழகத்திற்கு வந்த உடன் கலர் மட்டும்தான் மாற்றமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    From Green to Saffron colour change in TamilNadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X