சோமனூர் பஸ் நிலைய விபத்து.. விசாாரணை அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி நியமனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்து குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை, சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை செப்டம்பர் 7 ம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தள்ளனர். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த விபத்து.

Gagandeep Singh Bedi to inquire into the collapse of the Somanur bus stand

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு 2 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக கடலோரங்களில் நடைபெறும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ககன்தீப் சிங் பேடி தலைமையில்தான் குழு அமைத்திருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

ககன்தீப்சிங் பேடி அளித்த விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior IAS officer Gagandeep Singh Bedi to inquire into the collapse of the Coimbatore Somanore bus stand.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற