For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துன்பங்களின் நாயகி மீனா குமாரி.. டூடுல் வெளியிட்டு மரியாதை செலுத்திய கூகுள்!

துன்பங்களின் நாயகி என்று அழைக்கப்படும், மீனா குமாரியின் பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மீனா குமாரியை சிறப்பித்து டூடுல் வெளியிட்ட கூகுள்- வீடியோ

    சென்னை: துன்பங்களின் நாயகி என்று அழைக்கப்படும், மீனாகுமாரியின் பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

    மீனாகுமாரி, 1950களில் பாலிவுட்டில் ஆட்சி புரிந்த நடிகை. அப்போது இருந்து இளைஞர்களுக்கு கனவுக்கன்னியாக வலம் வந்தார் இந்த அழகி சுந்தரி. பாகிஸ்தானில் பஞ்சாப்பில் இருந்து இந்தியா வந்த அலி பக்ஷா என்ற முஸ்லிமிற்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த மஃஜபீன் பானு என்ற கிருஸ்துவ பெண்ணிற்கும் 1933ல் பிறந்தார். .

    Google Doodle: The Tragedy Queen Meena Kumari appears today as her birth anniversary

    ''தி லெதர் பேஸ்'' என்ற படத்தில் அறிமுகம் ஆன இவர் வெறும் 33 வருடத்தில் 92 படங்களில் நடித்து சாதனை படைத்தார். நடித்த அத்தனை படமும் அப்போது ஹிட். அதேபோல் இவரது பேச்சும், சின்ன சின்ன துணுக்கு பேட்டியும் கூட வைரல் ஹிட் ஆனது.

    காதல், தனிமை, சோகம் இதுதான் இவரது படங்களில் ஒற்றைவரி. அதேதான் அவரது வாழ்க்கையின் ஒற்றைவரியும் கூட. கடைசி வரை வாழ்க்கையில் தனிப்பட்ட ரீதியில் நிறைய துன்பங்களை அனுபவித்தார் இந்த நாயகி.

    வெறும் 38 வருடங்களே வாழ்ந்த இவர் 1972ல் லிவர் செயலிழப்பு காரணமாக, இவர் 38 வயதில் மரணம் அடைந்தார். அவரது கடைசி படமான பகீஷ் வெளியாகி, சரியாக 8 நாட்களில் அவருக்கு உடல்நலம் குன்றி, கோமாவிற்கு சென்று மரணம் அடைந்தார்.

    அவர் எழுதிய இரண்டு புத்தகம் இப்போதும் விற்பனையில் இருக்கிறது. அவர் எழுதிய கவிதைகளை இப்போதும் சிலர் மேற்கோள் காட்டி வருகிறார்கள். மூன்று முறை பிலிம்பேர் விருது பெற்ற அவரை சிறப்பிக்கும் விதத்தில் கூகுள் டூடுல் வெளியிட்டு இருக்கிறது.

    English summary
    Google Doodle: The Tragedy Queen Meena Kumari appears today as her birth anniversary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X