கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலாளராக மீண்டும் பொறுப்பேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிஜா வைத்தியநாதன் தமிழக தலைமை செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் கிரிஜா வைத்தியநாதன். இந்நிலையில் அண்மையில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.

Grija Vaithiyanathan again taken charge as Chief secretary of Tamil Nadu govt

இதைத்தொடர்ந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் கிரிஜா வைத்தியநாதன் விடுப்பில் சென்றதால் நிதித்துறை செயலர் சண்முகம் தலைமைச் செயலாளர் பொறுப்பை வகித்தார்.

இந்நிலையில் முழுகுணமடைந்த கிரிஜா வைத்தியநாதன் மீண்டும் தலைமை செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Grija Vaithiyanathan again taken charge as Chief secretary of Tamil Nadu govt. She was on leave for leg injurie.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X