முதல்வரா இருக்கும்போது ஒண்ணு... பிரதமாராயிட்டா வேற ஒண்ணு செய்யிறதா?- சரத்குமார் கேள்வி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: மாநில முதல்வராக இருந்த போது ஜிஎஸ்டி வராது எனக் கூறிய மோடி பிரதமரானதும் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது நியாயமா? என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைக்குடியில் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ''தியேட்டர் உரிமையாளர்கள் ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, உள்ளாட்சி வரி என 64 சதவீத பணத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு, மீதி 36 சதவீதத்தில்தான் தியேட்டர் உரிமையாளரும், திரைப்பட விநியோகஸ்தரும் பணத்தை பங்கிட்டுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வரியால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்னும் போது அரசு ஜிஎஸ்டியை யோசித்து அமுல்படுத்தியிருக்க வேண்டும். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது ஜிஎஸ்டியை அமுல்படுத்தவே கூடாது என்று கூறினார். ஆனால் பிரதமர் ஆனதும் அவரே அதை அமுல்படுத்தியது நியாயம் ஆகாது'' என சரத்குமார் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When Modi was a CM he against og GST and after becoming PM he is implemented GST is correct asked Samaththuva makkal katchi Leader Sarathkumar.
Please Wait while comments are loading...