தி.மு.க.வுக்கு பந்த் நடத்த எந்த அருகதையும் இல்லை.. எச்.ராஜா தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: விவசாயிகளுக்கு துரோகம் செய்த திமுக 25ஆம் தேதி பந்த் நடத்த எந்த அருகதையும் இல்லை என பாஜக தேசிய செயலாளர் எச்..ராஜா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விலங்கியல் துறை ஆராட்சி ஆய்வகம் திறப்பு விழாவில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

H.Raja Condemned on dmk bandh

அதனைத் தொடர்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறியதாவது: டிடி வி தினகரன் இருக்கும் வரையில் சசிகலா தரப்பு அணி அதிமுக விற்கு எதிரிகளே தேவை இல்லை, தாங்கள் கொள்ளை அடித்த பணத்தில் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என்ற ரீதியில் இது போன்ற செயலில் ஈடுபட்டனர்- ஜனநாயகத்திற்கு இது பெரும் அவமானம் உப்பை தின்றால் தண்ணீர் குடித்து ஆகவேண்டும் எனவும், இரட்டை இலை சின்னத்தை பெற இரண்டு மாதம் அவகாசம் கேட்டதன் அர்த்தம் இப்போது தெரிகிறது

தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியதாக அறிவித்துள்ளது. அவர்கள் நடத்தியது அனைத்துக்கட்சி கூட்டம் அல்ல. அவர்களது கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்திய கூட்டம். இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்கவில்லை. எனவே அது அனைத்துக்கட்சி கூட்டம் அல்ல.

அந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந் தேதி பந்த் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த பந்த் போராட்டம் தேவையற்றது. 2016-ம் ஆண்டு மத்திய அரசு பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. அனைத்து மாநிலங்களும் அந்த திட்டத்தை அமல்படுத்தின. ஆனால் தமிழகத்தில் மட்டும் அந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இதற்கு காரணம் என்ன? அந்த திட்டத்தை அமல்படுத்தி இருந்தால் விவசாயிகள் தற்கொலையை தடுத்து இருக்கலாம். மணல் கொள்ளையில் ஈடுபட்ட தி.மு.க.வுக்கு பந்த் நடத்த எந்த அருகதையும் கிடையாது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP general secretary H.Raja Condemned on dmk conducted coming 25th bandh
Please Wait while comments are loading...