எச். ராஜா தலைமறைவா.. எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா- போலீஸுக்கு சவால் விட்ட பாஜக நிர்வாகி
Recommended Video

திண்டுக்கல்: எச் ராஜா தலைமறைவா.. எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா என செய்தித்தாளை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸுக்கே சவால் விடும்படி பேசினார்.
புதுக்கோட்டையில் திருமயம் என்ற பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயத்துக்கு பக்கத்தில் மேடை போட போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் எச் ராஜா வெகுண்டெழுந்தார்.
இதையடுத்து போலீஸாரை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்தார். அப்போது உயர்நீதிமன்றம் உத்தரவு நாங்கள் என்ன செய்ய என கேட்ட போலீஸாரை ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்றதோடு கெட்ட வார்த்தையும் பேசினார்.

தலைமறைவு
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதாலும் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டதாலும் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
|
பண்ணை வீட்டில் உலா
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் இருந்து காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-ஆவது வீதியில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகின.

விநாயகர் சதுர்த்தி விழா
இதையடுத்து அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடந்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார்.

கண்ணுக்கு தெரியுதா
அப்போது ஒரு செய்தித்தாளில் "தலைமறைவானார் எச் ராஜா" என்ற முதல் செய்தியை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸாருக்கு சவால் விடும் தொனியில் பேசினார். அவர் கூறுகையில் எச் ராஜா தலைமறைவா, எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா. உன் கண்ணுக்கு தெரியுதா.

சவால் விட்ட பாஜக நிர்வாகி
இந்துக்களின் ஒருங்கிணைந்த ஒரே குரல் எச் ராஜாதான். அவர் சிங்கம் மாதிரி இங்க உட்காந்திருக்காரு, தலைமறைவுனு போட்டு இருக்கீங்களே உங்களுக்கு அசிங்கமாக இல்லையா. லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்க இருக்கோம். எங்கள் உயிர்களை தாண்டிதான் உங்களால் எச் ராஜாவை கைது செய்ய முடியும் என்று பேசினார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications