மறுபடியும் அட்மின் வேலையா? ஹேக் பண்ணிட்டாங்களா?.. எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய டிவிட்!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டு இருக்கும் டிவிட் ஒன்று மீண்டும் வைரலாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மீண்டும் சர்ச்சைக்குரிய ட்வீட் போட்டு டெலிட் செய்த எச்.ராஜா- வீடியோ

    சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டு இருக்கும் டிவிட் ஒன்று மீண்டும் வைரலாகி உள்ளது. அதே சமயம் இது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவ்வப்போது ஏதாவது டிவிட் செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அவர் மட்டுமில்லாமல் பாஜக தலைவர்கள் இப்படி செய்து மாட்டிக்கொள்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.

    பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் எதையாவது சொல்லிவிட்டு கடைசியில் இதை நான் சொல்லவில்லை அட்மின் சொல்லிவிட்டார் என்று எஸ்கேப் ஆவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இப்போது அவர் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    என்ன டிவிட்

    என்ன டிவிட்

    எச்.ராஜா வெளியிட்டு இருக்கும் அந்த டிவிட், ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றுக்கான விளம்பரம் ஆகும். இது யூ டியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் ஆப் ஆகும். பொதுவாக யூ டியூப் நிறுவனம், அதன் வீடியோக்களை வேறு ஆப் மூலம் டவுன்லோட் செய்வதை அனுமதிக்காது. அதையும் மீறி செயல்படும் ஒரு ''பைரசி'' ஆப்பைதான், எச்.ராஜா தனது பக்கத்தில் விளம்பரப்படுத்தி உள்ளார்.

    கேள்வி மேல் கேள்வி

    கேள்வி மேல் கேள்வி

    இதையடுத்து டிவிட்டர் வாசிகள் எச்.ராஜாவை இதை வைத்து கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். என்ன அட்மின் உனக்கு வேறு வேலை இல்லையா. என்ன அட்மின் மீண்டும் எச்.ராஜாவிற்கு தெரியாமல் டிவிட் செய்கிறாயா. எச்.ராஜா அண்ணே என்ன ஆப்புக்கு எல்லாம் விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிடீங்க என்று வகைதொகை இல்லாமல் கிண்டல் செய்துள்ளனர்.

    எதுவும் இல்லை

    எதுவும் இல்லை

    இந்த நிலையில், அந்த ஆப் கூகுள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. அவர் இந்த லிங்கை ஷேர் செய்து நல்ல செய்தி என்று பகிர்ந்து இருந்தார். ஆனால் அந்த லிங்கில் இருந்த ஆப், உடனடியாக கூகுள் பிளே ஸ்டோர் மூலம் நீக்கப்பட்டது.

    நீக்கினார்

    நீக்கினார்

    இந்த நிலையில் எச்.ராஜாவின் டிவிட் தொடர் சர்ச்சை ஆனது. இதனால் எச்.ராஜா தன்னுடைய டிவிட்டை டெலிட் செய்துவிட்டார். இதனால் மீண்டும் இது அட்மின் வேலையோ, இல்லை யாரும் அவரது அக்கவுண்டை ஹேக் செய்துவிட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    {document1}

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+