For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிப்பூரில் வீரமரணம் அடைந்த கோவை ராணுவ வீரரின் உடல் முழு மரியாதையுடன் அடக்கம்!

By Mathi
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நிகழ்ந்த சண்டையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மோகன் குமாரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கோவையைச் சேர்ந்த மோகன் குமார் 25-வது மதராஸ் படைப் பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். மணிப்பூர்-மியான்மார் எல்லையில் கடந்த 29-ம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் வீர மரணம் அடைந்தார்.

அவருக்கு பானுமதி என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். தமிழக அரசு சார்பில் மோகன் குமாரின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அவரது உடல் நேற்று கோவை கொண்டுவரப்பட்டது. கோவை புதூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மோகன் குமாரின் உடலுக்கு, வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்டர் பிரிகேடியர் சுரேஷ் குமார் மற்றும் கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மின்மயானத்தில் மோகன் குமாரின் உடலுக்கு முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் ராணுவ மரியாதை செலுத்தினர். பின்னர் 42 குண்டுகள் முழங்கள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

English summary
The body of G Mohankumar, Havildar of 25 Madras Regiment, who was killed in a bomb attack by suspected militants in Manipur two days back, was cremated here today with state honours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X