"அய்யோ, இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்".. ஐஸ்பெட்டியில் மகளை தொட முடியாமல் பதறிய தாய்.. நெசலூர் சோகம்
நெசலூரில் மகளின் சடலத்தை கண்டு, மண்ணில் புரண்டு கதறி அழுதார் தாய்
கள்ளக்குறிச்சி: மாணவியின் சடலம் சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், "இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்" என்று மாணவியின் தாய் கதறியது, காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.
Recommended Video
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்கள்..

குழப்பம்
மாணவி எப்படி இறந்தார் என்றே தெரியாமல் தமிழக மக்கள் கலங்கி உள்ளனர்.. இது தொடர்பான விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இந்த மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி பள்ளி முன்பு மிகப்பெரிய போராட்டம் நடந்தது.. ஆனால், அந்த போராட்டம், மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.. இதில் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்...

கதறல்
இதனிடையே, சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவின்படி, மாணவியின் உடல் இன்னொரு முறை போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. பிறகு, கோர்ட் உத்தரவையடுத்து, இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் கதறி அழுதபடியே பெற்று கொண்டனர்... கிட்டத்தட்ட 11 நாட்களுக்கு பிறகு, மகளின் சடலத்தை பார்த்ததால், அவர்கள் நிலைகுலைந்துவிட்டனர்.. மாணவியின் உடலுக்கு அரசு சார்பில் மருத்துவமனையிலேயே அஞ்சலி செலுத்தப்பட்டது.. அமைச்சர் கணேசன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்..

ஐஸ் பெட்டி
பிறகு, மாவட்ட ஆட்சியர் அஞ்சலி செலுத்தினார். இறுதி சடங்கு செய்வதற்காக, சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.. ஐஸ் பெட்டியில் மாணவியின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.. இதை பார்த்ததும், மாணவியின் தாய் அலறி துடித்தார்.. "என் சாமி.. 10 வருஷம் கழிச்சு பொறந்தயே.. இந்த கோலத்துலயா உன்னை நான் பார்க்கணும்" என்று இதயம் வெடித்து கதறினார்.. அங்கிருந்த உறவினர்களும், ஊர்மக்களும், மாணவியின் சடலத்தை கண்டு அழுதனர்..

கதறி அழுத தாய்
ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட மகளின் உடலை, தொட முடியாமல் கதறி அழுது கொண்டிருந்த தாயை கண்டு, மேலும் விம்மி விம்மி அழுதனர்.. ஒருபக்கம் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளும் ஆரம்பமானது.. ஊர் பெரியவர்கள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் இந்த சடங்கினை செய்ய துவங்கினர்.. சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்ற தாய், அதைக் காண சகிக்காமல், மண்ணில் புரண்டு அழுதார்.. இதனிடையே, நெசலூர் முழுவதும் காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.. போலீசார் பாதுகாப்புக்காக குவிந்துள்ளனர்..!

சுடுகாடு
மாணவியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றதை அடுத்து இறுதி ஊர்வல வாகனத்தில் மாணவியின் உடல் ஏற்றப்பட்டு ஊர்வலம் தொடங்கியது... அப்போது ஊர்மக்கள், மாணவிக்கு பிரியாவிடை தந்தனர்.. இறுதியில், பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு மாணவியின் சடலம் கொண்டு வரப்பட்டது.. அனைத்து சடங்குகளும் நிறைவேறியதையடுத்து, மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.. அப்போது, தாய் நீதி கிடைக்காமலேயே அடக்கம் செய்கிறோமே என்று கதறியது காண்போரின் இதயத்தை பிழிந்தெடுத்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications