சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை.. வேளச்சேரியில் வெளுத்து வாங்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பகலில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் முழுவதும் பல பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain in Chennai and other parts of Tamil Nadu

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. வேளச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. பகல் நேரங்களில் வெயிலால் அவதிப்பட்ட மக்கள் இரவில் வெப்பம் தணிந்து உற்சாகமடைந்துள்ளனர்.

இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, சேலம், ஓமலூர், தாரமங்கலம், திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai, thiruvarur and salem received heavy rain on today
Please Wait while comments are loading...