For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கன மழை

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்தவகையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக மழை பெய்து வருகிறது.

Heavy rain fall in Tanjore and neighbouring districts

தொடரும் கனமழையால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையில் 7.8 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 22.0 மி.மீ, திருவையாறு 20.4 மி.மீ, தஞ்சாவூர் 15.4 மி.மீ, அய்யம் பேட்டை 28.0 மி.மீ, பாபநாசம் 32.0மி.மீ, கும்பகோணம் 27.0.மி.மீ, கீழணை அணைக்கரை 43.0 மி.மீ, நெய்வாசல் தென்பாதி 20.8மி.மீ, பூதலூர்5.4 மி.மீ, வெட்டிக்காடு 16.0 மி.மீ, ஈச்சன் விடுதி 2.0 மி.மீ ஒரத்தநாடு 12.8மி.மீ, பட்டுக்கோட்டை 10.0 மி.மீ, மதுக்கூர் 15.0மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் 30.2 மி.மீ, குடவாசல் 72.8 மி.மீ, நீடாமங்கலம் 30.0 மி.மீ, நன்னிலம்35.3 மி.மீ, திருவாரூர் 62.4மி.மீ, முத்துப்பேட்டை 9.6மி.மீ, திருத்துறைப்பூண்டி 13.0 மி.மீ, மன்னார்குடி 42.0 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை 75.8மி.மீ, மஞ்சளாறு 35.6மி.மீ, மணல்மேடு 14.4மி.மீ, கொள்ளிடம் 24.0 மி.மீ, சீர்காழி 14.6 மி.மீ, பொறையாறு 42.0 மி.மீ, கொரையாறு 32.4மி.மீ, பாண்டவையாறு 41.4 மி.மீ, முல்லையாறு 69.6 மி.மீ, நாகப்பட்டினம் 63.0 மி.மீ, தலைஞாயிறு31.6 மி.மீ, திருப்பூண்டி 37.6மி.மீ, வேதாரண்யம் 21.4 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரை பகுதியில் 43.0 மி.மீ மழையும் குறைந்தபட்சமாக ஈச்சன் விடுதியில் 2.0மீ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக குடவாசல் பகுதியில் 72.8 மி.மீட்டர் மழைபெய்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்ச மாக மயிலாடுதுறையில் 75.8மி.மீ மழையும் குறைந்த பட்சமாக மணல்மேடு பகுதியில் 14.4மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

கனமழையின் எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால், இன்று காலையில் கல்லணையில் இருந்து வெண்ணாற்றுக்கு வினாடிக்கு 4ஆயிரம் கனஅடி தண்ணீரும், கல்லணை கால்வாய் புது ஆற்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 4 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 7 ஆயிரத்து 4 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தற்காலிகமாக கல்லணையில் இருந்து காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு, கோவிலடி சேனல் மற்றும் பிள்ளை வாய்க்கால் ஆகியவற்றுக்கு சென்று கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Because of the north east monsoon their is heavy rainfall in Tanjore, Tiruvaroorand Nagai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X