பைக், காரில் பயணிப்போர்கள் கவனிக்க.. சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு!
Recommended Video

சென்னை: டூவீலரில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கில், பைக்கில் பயணிக்கும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.கே.ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும் முறையாக பின்பற்றப்படுவதில்லை, முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வில்லை என்று நீதிபதிகள் நேற்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இன்று விரிவான உத்தரவை நீதிபதிகள், பிறப்பித்துள்ளனர். அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இதுதொடர்பாக, பிறப்பித்த அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பைக்கில் முன்னமர்ந்து செல்பவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இந்த அரசாணையை அமல்படுத்தியது குறித்து அக்டோபர் 23ஆம் தேதி அறிக்கையாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஹைகோர்ட் உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications