அரிதான ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நந்தீஸ்வரன்... நிதி திரட்டும் நண்பர்களுக்கு நீங்களும் உதவலாமே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வசித்து வரும் 33 வயது இளைஞர் நந்தீஸ்வரன் அரிதான ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மருத்துவ சிகிச்சைக்காக நண்பர்கள் பொது நிதி திரட்டல் மூலம் பணம் திரட்டி வருகின்றனர், விருப்பம் உள்ள நீங்களும் உதவி செய்து ஒரு குடும்பத்தை காப்பாற்றலாமே.

சரவணன் தங்கவேல் என்பவர் தன்னுடைய நண்பருக்காக இம்பேக்ட் குரு. காமில் கிரவுட் ஃபண்டிங்கில் நிதி திரட்டி வருகிறார். 33 வயதான என்னுடைய நண்பர் நந்தீஸ்வரன் அக்யூட் மைலாய்டு லெகுமியா என்ற அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அடையாறு கேன்சர் மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிர் வாழ்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு உடனடி சிகிச்சையும், உயர் தர மருத்துவ சிகிச்சைகளும் தரப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உயிர் பிழைக்க சிகிச்சை தேவை

உயிர் பிழைக்க சிகிச்சை தேவை

இந்த சிகிச்சைக்காக அவருக்கு போன் மேரோ ட்ரான்ஸ்பிளான்ட் கூட செய்ய நேரிடும் மேலும் ரேடியேஷன் தெரபியும் நீண்ட நாட்களுக்கு அவரை பிழைக்க வைக்க தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். நந்தீஸ்வரனின் வருமானத்தை நம்பியே அவருடைய தாய், மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

உதவி செய்யுங்கள்

உதவி செய்யுங்கள்

குடும்பத்தாரும், நண்பர்களும் நந்தீஸ்வரனின் பக்கம் துணையாக இருக்கிறோம். எனினும் சுமார் 15 லட்சம் வரை அவருடைய மருத்துவ செலவிற்கு தேவைப்படுகிறது. மருத்துவ காப்பீட்டுக்கான எல்லையும் ஒரு வாரத்திலேயே தாண்டிவிட்டது. எனவே இந்த நிலைமையை சமாளிக்க நல்ல உள்ளங்களின் உதவியை நாடி வந்துள்ளோம்.

ஒரு குடும்பத்தை காப்பாற்றலாம்

ஒரு குடும்பத்தை காப்பாற்றலாம்

உங்களின் சிறு உதவி ஒருவரின் உயிரைக் காப்பாற்றி ஒரு குடும்பத்திற்கே வெளிச்சத்தையும் புன்னகையையும் தரும். மருத்துவர்கள் ஆலோசனை, டயாலசிஸ், ரேடியோதெரபி, கீமோதெரபி, மருத்துவமனை செலவுகள், மருந்து மாத்திரைகள் என்று வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் வரை செலவாகிறது.

நந்தீஸ்வரன் குடும்பத்திற்கு வெளிச்சம் தாருங்கள்

நந்தீஸ்வரன் குடும்பத்திற்கு வெளிச்சம் தாருங்கள்

நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து மற்றவர்களுக்கு வாழ்வளிப்பது தான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை நந்தீஸ்வரனுக்கு நீங்கள் பரிசளிக்கலாமே என்று கேட்டுக் கொண்டுள்ளார் சரவணன். நந்தீஸ்வரனுக்கு நிதியுதவி செய்வதால் உங்களுக்கும் மன திருப்தியோடு வருமான வரி விலக்கு கிடைக்கும். மேலும் இவருக்கு உதவி செய்ய நினைப்போர் கீழே உள்ள தகவலின் படி நிதியுதவி செய்யலாம்.

NEFT/IMPS/RTGS transfer to the following account:
(From Banks in India only)
Account number: 700701707048325
Account name: Nandeeswaran P
IFSC code: YESB0CMSNOC
OR
For UPI Transaction: supportnandeeswa@yesbankltd

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Help for 33 years Nandeeswaran who is affected by rare type blodd cancer, his family struggling for medical expenses as doctors assured for his survival possibility higher you may also contribute to save his life.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற