மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தால் வரலாற்று சிறப்பு மிக்க வசுந்தராயர் மண்டபம் பெரும் சேதமடைந்தது.

High court bench of Madurai orders to file a report on the fire accident in Meenakshi Amman temple

இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அபுல் கலாம் ஆசாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

அனைத்து கோவில்களில் தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. மேலும் மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தின் தற்போதைய நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மேம்பாட்டு வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை வரும் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையையும் பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
High court bench of Madurai orders to to file a report on the fire accident in Meenakshi Amman temple. The case has been post poned to 27th feb.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற