For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேட்டவுடன் ஓபிஎஸ்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்புக் கொடுத்த மத்திய அரசு - வீடியோ

மத்திய அரசிடம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என அவருடைய ஆதரவு எம்பிக்கள் கோரிக்கைவிடுத்ததை அடுத்து, உடனே அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு படையில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. அதையடுத்து, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார்.

High security given to OPS by central government

இந்நிலையில், ஆ.ர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், இரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிக்கும்போது டி.டி.வி.தினகரன் தரப்பினரால் ஓ.பி.எஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் எழுந்தது.

அதையடுத்து , தினகரன் தரப்பினரால் ஓ.பி.எஸ். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு உயர் பாதுகாப்பு வழங்கும்படி, அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு நாட்களுக்கு முன்பு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து , இன்று முதல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு படையில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். இவர்கள் ஓ.பி.எஸ்க்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Central government has given 'Y' cadet security to Ex. Minister O.Panneerselvam, after a request from his MPs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X