For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் குழந்தையை, ஆண் குழந்தை என்று கூறி குழப்படி – மருத்துவமனை ஊழியர்களால் டென்ஷன்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தேனி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை ஆண் குழந்தை என்று மாற்றிச் சொல்லிய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் முருகன்.

இவரது மனைவி சண்முகபிரியா பிரசவத்திற்காக நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

என்ன குழந்தை?:

இவருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து கணவர் முருகன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து ஊழியர்களிடம் என்ன குழந்தை பிறந்துள்ளது என கேட்டனர்.

உங்களுக்கு சிங்க குட்டி:

அதற்கு அவர்கள் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த முருகன் தனது உறவினர்கள் அனைவருக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இல்லை இல்லை புலிக்குட்டி:

சிறிது நேரம் கழித்து தனது மனைவியை பார்க்க வார்டுக்குள் வந்தபோது அங்கு பெண் குழந்தை இருந்துள்ளது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் ஆண் குழந்தை என்று கூறினார்களே என்று ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஊழியர்களுக்கு நாம் என்ன சொன்னோம் என்றே தெரியவில்லை.

குழந்தை மாற்றம்:

இதனிடையே சண்முக பிரியாவின் உறவினர்கள் மருத்துவமனையில் குழந்தையை மாற்றி விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவம் அவரே குழம்பிட்டார்:

இதுகுறித்த விசாரணையில் மருத்துவமனை ஊழியர்கள்தான் தவறுதலாக பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்தது தெரிய வந்தது.

ஏற்காத உறவினர்கள்:

அதனை அவர்களிடம் எடுத்து கூறியும் அவர்கள் ஏற்கவில்லை. அதன் பின் சண்முகபிரியாவுக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என உறுதி செய்யப்பட்டது.

ஊழியர்கள் இடமாற்றம்:

இந்நிலையில் குழந்தையை பாலினம் மாற்றி கூறி சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவமனை பணியாளரான செல்வம் என்பவரை பழனிக்கும், லோகநாதனை பண்ணைக்காட்டுக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

English summary
Dindukkal hospital workers wrongly told that a couple got boy kid instead of girl kid. So, the workers shifted to other hospitals as punishment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X