தூத்துக்குடி படுகொலையும்.. பெட்ரோல் விலை உயர்வும்
தூத்துக்குடி படுகொலை காரணமாக பெட்ரோல் விலை உயர்வு மறைக்கப்பட்டுவிட்டது, மோடிக்கு மறைமுகமாக தமிழக முதல்வர் உதவி இருக்கிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி படுகொலை காரணமாக பெட்ரோல் விலை உயர்வு மறைக்கப்பட்டுவிட்டது, மோடிக்கு மறைமுகமாக தமிழக முதல்வர் உதவி இருக்கிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த மோசமான திடீர் துப்பாக்கி சூட்டிற்கு பின்பிருக்கும் அரசியலை, மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார். ''தூத்துக்குடி படுகொலைக்காக நாம் துடித்துக் கொண்டு இருக்கும் போது, நாம் ஒரு விஷயத்தை மறந்துவிட்டோம். இன்று பெட்ரோல் விலை முதல்முறையாக 80 ரூபாயை தாண்டிவிட்டது. சென்னையில் 80.15 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கிறது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
So what did we forget because we are all rightfully agitated about #TuticorinKillings and #SterliteProtest? #PetrolPriceHike. Today #petrol breached the ₹80 mark for the first time in #Chennai. Selling at ₹80.15. @PMOIndia can't hope for a bigger Bhakth than @CMOTamilNadu
— R.K.Radhakrishnan (@RKRadhakrishn) May 23, 2018
அதே டிவிட்டில் அவர், பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வரை விட சிறந்த பக்தர் கிடைக்க மாட்டார், என்று கூறியுள்ளார். அதன்படி, தூத்துக்குடியில் இவ்வளவு பெரிய துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்து, மோடியின் தவறை தமிழக முதல்வர் எளிதாக மறைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications