கொங்கு நாட்டில் 'பீட்டா' பங்காளி 'ஹெச்ஏஎஸ்'-ன் சித்ரா இசை நிகழ்ச்சி- கடும் எதிர்ப்பால் ரத்து!
கோவையில் பீட்டாவின் பங்காளி அமைப்பான ஹெச்.ஏ.எஸ். நடத்த இருந்த பாடகி சித்ரா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: தமிழகமே பீட்டாவுக்கு எதிராக கொந்தளித்தாலும் அதன் கூட்டாளிகள் பன்னாட்டு நிதி துணிச்சலால் அடங்க மறுத்து வருகின்றனர். பீட்டாவுக்கு எதிரான புரட்சியை பற்றி கவலைப்படாமல் ஹியூமன் அனிமல் சொசைட்டி கோவையில் பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் தற்போது இந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாட்டு அடையாளம்; அதை தடை செய்ய பீட்டாவே நீ யார்? என்பதுதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த கேள்வி. பீட்டாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தமிழகத்தில் நீடிக்கிறது.
இதனால் பீட்டா அதன் பங்காளி அமைப்புகளின் பெயரில் தொடர்ந்து வாலை ஆட்டி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக 'கியூப்பா' என்ற குட்டியை ஏவிவிட்டு வழக்கு போட்டிருக்கிறது பீட்டா.

சித்ரா இசை நிகழ்ச்சி
இந்த நிலையில் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற பீட்டாவின் மற்றொரு பங்காளியான ஹியூமன் அனிமல் சொசைட்டி (HAS) கோயம்புத்தூரில் வரும் 29-ந் தேதி பாடகி சித்ராவை வைத்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
சித்ராவும் அழைப்பு
ஜல்லிக்கட்டு புரட்சியைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை தமிழ் மண்ணில் நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாடகி சித்ராவும் அழைப்பு விடுத்திருந்தார்.

சதிக்கு தமிழர் பணம்
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தமிழர்களிடம் இருந்து கட்டணமாக பணத்தை வாங்கி தமிழர் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் சதிக்கு இத்தகைய விலங்குகள் நல அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

கடும் எதிர்ப்பு
ஆகையால் கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் பொதுமக்கள். கோவை போலீசில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தரக்கூடாது எனவும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இசை நிகழ்ச்சி ரத்து
இதனால் அலறிப் போன பீட்டாவின் பங்காளி தற்போது பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் விலங்குகள் நல அமைப்புகள் மீதான கண்காணிப்பும் கோபமும் வெடித்து கிளம்பி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications