For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதமாற்ற திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றாலும் ஜீவனாம்சம்... உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

மதமாற்ற திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: மதமாற்ற திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

மதுரையை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் பதிவு செய்யப்படாத மதமாற்ற திருமணத்தில் மனைவிக்கு வழங்கப்படும் ஜீவனாம்சம் குறித்து விளக்கம் கேட்டு உயர்நீதி மன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார். எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், பணம் கொடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

Husband should give alimony to wife in non-registered marriage too -HC

இவர் தன்னுடைய கணவனை பிரிந்து வாழ்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீது தற்போது உயர்நீதி மன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அதில் ''மதமாற்ற திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றாலும் ஜீவனாம்சம் தர வேண்டும். ஜீவனாம்சம் பெற சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை'' என்றுள்ளது.

மேலும் ''கணவன் மனைவியாக வாழ்வது உறுதியெனில் ஜீவனாம்சம் வழங்கலாம். பெண்ணின் வாழ்வை கருதி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்'' என்றும் கூறியுள்ளது.

அதேபோல் ''ஜெயகுமாரிக்கு அவரது கணவர் மாதம் 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பிரிந்திருந்த காலத்திற்கான பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

English summary
High Court bench says tha husband should give alimony to wife in non-registered other religion marriage too. They should give 8000 per month to their wife for their living.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X