நான் கூட இந்து தீவிரவாதிதான்.. சொல்வது பாஜக எம்.பி. இல.கணேசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நான் கூட இந்து தீவிரவாதிதான் என்றும் இந்து மதத்தின் மீது பற்றுக் கொண்ட தீவிரவாதி என்றும் பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார்.

இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் வார இதழ் ஒன்றில் வெளியானது. இதனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.

I too Hindu terrorist,says IlaGanesan

இதுகுறித்து மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக எம்.பி. இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிரவாதம் என்பது நல்லவார்த்தை. ஆனால் இப்போது கெட்ட வார்த்தையாக மாறி விட்டது.

தேசத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, அந்நிய நாட்டுக்கு ஆதரவாக செயல் படுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறில்லை. மேலும், தமிழ்நாட்டின் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர்கள் 140-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்து தீவிரவாதம் என்று சொல்வது சரியில்லை. நான் கூட இந்து தீவிரவாதி தான்; இந்து மதத்தின் மீது பற்று கொண்ட தீவிரவாதி. மழை பெய்வது நல்லதுதான். ஆனால் தற்போது மழையை கண்டு அஞ்ச வேண்டிய சூழல் உண்டாகி
உள்ளது.

கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் கருத்து கூறிவருவது அவரது உரிமை. ஆனால் அவர் கருத்துக்கு எதிர் தரப்பு கருத்துக்களை சகிப்பு தன்மையோடு ஏற்று கொள்ள வேண்டும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP MP Ila Ganesan says that he is also Hindu terrorist. We have to do debate on Kamal's comment on Hindi terrorism.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற