For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பா விவசாயி... சித்தப்பா பராமரிப்பில் படித்து 499 மார்க் வாங்கிய பிரேமசுதா.. டாக்டராக விருப்பம்

Google Oneindia Tamil News

நாமக்கல்: பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி பிரேம சுதாவின் தந்தை விவசாயி ஆகும். தன் சித்தப்பாவின் பராமரிப்பில் படித்து இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் சிவகுமார், பிரேமசுதா ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

I will become a doctor says state 1st rank student

இவர்களில் பிரேமசுதாவின் தந்தை விவசாயி ஆவார். மருத்துவரான தனது சித்தப்பாவின் பராமரிப்பில் நாமக்கல், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். தனது சித்தப்பாவைப் போலவே தானும் எதிர்காலத்தில் மருத்துவர் ஆவதே தனது லட்சியம் என பிரேம சுதா தெரிவித்துள்ளார்.

தனது தந்தை விவசாயி என்பதால், சித்தப்பா தன்னைப் படிக்க வைத்து உதவி புரிந்ததாக பிரேம சுதா தெரிவித்துள்ளார்.

மாநிலத்திலேயே முதல் மாணவியாக பிரேமசுதா தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து அவரது பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததை ஈடுபாட்டுடன் படித்து பிரேம சுதா இந்த சாதனையைப் படைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

English summary
The SSLC first rank holder Prema Sudha's ambition is to become a doctor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X