கைதுகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளிக்காவிட்டால் தமிழர்கள் கோழைகள்.. கட்ஜு அதிரடி #katju

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.

I will brandise Tamils as Cowards, 'warns' Katju

இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former SC judge Markandeya Katju has asked the people of Tamil Nadu to protest the arrests of TN police for commenting on the health of CM Jayalalitha. He said in his FB page that, If massive demonstrations are not immediately held all over Tamilnadu, particularly by the youth, against these despotic unconstitutional acts of the Tamilnadu state authorities, I will brand Tamilians as a bunch of cowards, who only talk big but cannot defend their civil liberties granted by the Constitution against these tinpot dictators and chamchas.
Please Wait while comments are loading...