For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் கட்டுறேன் எங்க அத்தை ஜெ.வோட 100 கோடி அபராதத்தை.. தீபக் அதிரடி!

ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் திடீரென சசிகலா தரப்புக்கு எதிராக பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராதம் 100 கோடி ரூபாயை தானே செலுத்துவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரனை அதிமுக தலைமையாக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவின் போது சசிகலா தரப்பால் அணைத்துக்கொள்ளப்பட்டவர் அவரது அண்ணன் மகனான தீபக். ஜெயலலிதாவுக்கு குடும்பத்தினர் என்ற முறையில் இறுதிச்சடங்கு செய்யவும் சசிகலா குடும்பம் அவருக்கு அனுமதி வழங்கியது.

I will pay Jayalalitha's fine Rs.100 crore: Deepak

அன்று முதல் சசிகலா அத்தை என்று வாயார கூறி வந்தார். தீபா சசிகலா குடும்பத்தை எதிர்த்தப் போதும் கூட தீபக் அவர்களுக்கு ஆதரவாகவே இருந்துவந்தார். கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தது.

அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபயும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு சிறையில் கடந்த 16ஆம் தேதி அடைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் பெங்களூரு சிறைக்கு டிடிவி தினகரனுடன் சென்ற தீபக் சசிகலாவை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்தியோக பேட்டியளித்தார். அப்போது தனது அத்தை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கடன் வாங்கியாவது கட்டுவேன் என தெரிவித்துள்ளார்.

சகோதரி தீபாவுக்கும் தனக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், அதிமுகவின் தலைமையா டிடிவி தினகரனை ஏற்க முடியாது என்றார். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவுக்கு வரவேண்டும் என்றும் அவர் தீபக் கூறினார்.

இதுவரை சசிகலா தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த தீபக் இன்று திடீரென டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Jayalalitha's brother's son Deepak Says that he will pay the fine of Jayalalitha Rs 100 crores by himself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X