சீட் பெல்ட் போட்டு கார் ஓட்டுங்க.. இல்லாட்டி ரூ. 100 அபராதம் கட்டுங்க - போலீஸ்
சென்னை: சென்னையில் டிசம்பர் 2ம் தேதி முதல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் சீட் பெல்ட் அணிந்துதான் ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் சீட் பெல்ட் அணிவதன் அவசியம், முக்கியத்துவத்தை வலியுறுத்தி தற்போது சென்னையில் விழி்ப்புணர்வுப் பிரசாரத்தை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

டிசம்பர் 2ம் தேதி முதல் சீட் பெல்ட் போடுவது கட்டாயமாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடந்தது.
காந்தி சிலை அருகே தொடங்கி உழைப்பாளர் சிலை அருகே இந்த பேரணி முடிவடைந்தது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்ட போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் தினகரன் கூறுகையில், 4 சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை முதல் தடவை மீறுவோருக்கு 100 ரூபாயும், அடுத்த முறையில் இருந்து 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் இதனை கண்காணிக்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் சீட் பெல்ட் அணியாததால், 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
எனவே, காரை கிளப்புவதற்கு முன்பு சீட் பெல்ட்டை போட்டுக்கொள்வது உங்களுக்கும் நல்லது.. உயிருக்கும் நல்லது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications