For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டிலிருந்து மகனை பார்க்க வந்தவர் டெங்கு காய்ச்சலால் மரணம் - வீடியோ

மகனுக்கு டெங்குக் காய்ச்சல் எனபதால் அவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்த தந்தைக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    மகனை பார்க்க வந்த தந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலி-வீடியோ

    காரைக்குடி: டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகனைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்தவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்குடி அசோக்நகரைச் சேர்ந்தவர் முருகேஷ். அவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். அவரது மகனுக்கு டெங்குக் காய்ச்சல் வந்து அவதிப்பட, அந்தத் தகவலை அவருக்குத் தெரிவித்துள்ளனர்.

    In Karaikudi a person died because of Dengue fever

    இதனையடுத்து மகனைப் பார்க்க சவுதி அரேபியாவில் இருந்து முருகேஷ் காரைக்குடி வந்தார். அங்கு வந்த சில நாட்களிலேயே முருகேஷுக்கு டெங்கு காய்ச்சல் தொற்றியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது. பருவமழைக்குப் பிறகு தொற்றுநோய்களும் காய்ச்சலும் வேகமாகப் பரவி வரும் வேளையில் அரசு மெத்தனமாக உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    English summary
    In Karaikudi a person died because of Dengue fever. Dengue is spreading all over Tamilnadu very severely after Rainfall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X