பல்லவன் இல்லம் மட்டுமில்ல மேலும் 6 இடங்களை திமுக அடமானம் வச்சுது.. போட்டுடைத்த விஜயபாஸ்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் பல்லவன் இல்லம் மட்டுமின்றி மேலும் 6 இடங்கள் அடமானம் வைக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் விளக்கமளித்தார்.

In the DMK period including Pallavan house 6 places are mortgaged: Minister MR Vijayabaskar

திமுக ஆட்சியில் பல்லவன் இல்லம் மட்டுமின்றி மேலும் 6 இடங்கள் ரூ. 30.50 கோடிக்கு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் 10 பணிமனைகள் மட்டுமே புதிதாக திறக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

2011ஆம் ஆண்டு முதல் 1231 கோடி ரூபாய் போக்குவரத்துத்துறைக்கு நிலுவைத் தொகையாக உள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மேலும் அதிமுக காலத்தில் போக்குவரத்துத்துறைக்கு 10 ஆயிரத்து 513 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். பராமரிப்புகளுக்காக மட்டும் 53 விருதுகளை தமிழக அரசு பெற்றது என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister MR Vijayabaskar said that in the DMK period including Pallavan house 6 places are mortgaged. Minister MR Vijayabaskar responding to Stalin accusation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற