பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்து இருக்கிறது.

ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

Inauguration ceremony for Pongal special buses cancelled

இந்த நிலையில் தற்போது பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என கூறப்பட்ட நிலையில் விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் கூட்ட நெரிசலை சமாளிக்க உதவும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களுக்கு வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது. மேலும் இந்த முறை பொங்கலுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதே சிக்கலாகி இருக்கிறது. இந்த வெள்ளிக் கிழமையுடன் பொங்கல் விடுமுறைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bus strike continues for 6th day in Tamil Nadu. Bus strike makes huge problem to common people. Due to this inauguration ceremony for Pongal special buses cancelled. Inauguration ceremony supposed to take place today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற