வருமான வரித்துறை அதிரடி... கார்த்தி சிதம்பரத்தின் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தின் மீது 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நுங்கம்பாக்கில் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை மட்டுமில்லாது காரைக்குடி, டெல்லி, நொய்டா என ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

 Income tax department registered case against Karthi Chidambaram.

அதில் பல முக்கிய வாணங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெளிநாட்டில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறப்படுகிறது. அது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள வேறு யாருக்காவது இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளதா எனவும் வருமான வரித்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Yesterday Income tax department raided in Ex. Minister P.Chidambaram's house and they registered case against Karthi Chidambaram.
Please Wait while comments are loading...