தினகரன் வீட்டில் டிஜிட்டல் லாக்கர்... பாஸ்வேர்ட் தெரியாமல் குழம்பிய அதிகாரிகள்... திறந்தது எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள்....சாணி, உரம் இருந்ததா?- வீடியோ

  சென்னை: நேற்று புதுச்சேரியில் இருந்த தினகரனின் பண்ணை வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனை சரியாக 14 மணி நேரம் நடந்தது.

  இந்த சோதனையில் நிறைய ஆவணங்கள் கிடைத்தாக கூறப்படுகிறது. அங்கு பாதாள சுரங்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

  இந்த நிலையில் அங்கு இருந்த ஒரு டிஜிட்டல் லாக்கை திறக்க அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் கஷ்டப்பட்டு இருக்கின்றனர்.

   தினகரன் வீட்டில் சோதனை

  தினகரன் வீட்டில் சோதனை

  தமிழ்நாடு முழுக்க மொத்தம் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். காலையில் இருந்து புதுச்சேரியில் இருக்கும் தினகரனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அங்கு இருந்து பெரிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதற்குள் நிறைய ஆவணங்களும், சொத்து பத்திரங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

   பண்ணை வீட்டில் இருந்த டிஜிட்டல் லாக்

  பண்ணை வீட்டில் இருந்த டிஜிட்டல் லாக்

  இந்த நிலையில் அந்த பண்ணை வீட்டில் டிஜிட்டல் லாக் ஒன்றும் இருந்து இருக்கிறது. மிகவும் பெரிய அளவில் இருந்த அந்த லாக் 4 எண்கள் கொண்ட பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தினகரன் இந்த பாஸ்வேர்டை கொடுக்க மறுத்துவிட்டதால் அதை திறக்க முடியாமல் போனது.

   5 மணி நேரம் திணறிய அதிகாரிகள்

  5 மணி நேரம் திணறிய அதிகாரிகள்

  இதையடுத்து அந்த லாக்கரை திறக்க 5 மணி நேரமாக அதிகாரிகள் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். தினகரன் உதவி இல்லாமல் அதை திறப்பது கஷ்டம் என்பதால் இரண்டு அதிகாரிகள் அதற்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் அவர்கள் உட்கார்ந்து ஒவ்வொரு பாஸ்வேர்டாக போட்டு சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள்.

   லாக்கை திறந்துவிட்டனர்

  லாக்கை திறந்துவிட்டனர்

  இந்த நிலையில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் வேலை 3.30 மணிக்கு முடிந்து இருக்கிறது. 5 மணி நேரம் நிறைய பாஸ்வேர்ட்களை கணித்து திறக்க முயன்றனர். கடைசியாக 3.30 மணிக்கு அவர்கள் உபயோகப்படுத்திய பாஸ்வேர்டின் மூலம் அந்த லாக்கர் திறக்கப்பட்டது. அதற்குள் நிறைய முக்கியமான தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Income Tax raid at many places in Tamilnadu . Income tax raids at a Dinakaran house and his properties. Income Tax officers struggled to open digital lock in Dinakaran House

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற