சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் பட்டொளி வீசி பறந்த தேசியக்கொடி.. முழங்கிய மங்கல வாத்தியங்கள்
சிதம்பரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றப்படுவதற்கு முன்பாக நடராஜரின் பாதத்தில் வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
நாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்யப்பட்டது.
சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னர், கோயில் செயலாளர் சிஎஸ்எஸ் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் 142 அடி உச்சியில் 147 வது முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டவுடன் கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் நடராஜர் கோவில் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுதந்திர தினம், குடியரசு தினத்தில் தேசமும் பக்தியும் இணைந்து கடந்த 77 வருடங்களாக தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தொன்று தொட்டு தேசப்பற்றையும் இணைத்து பழங்காலத்தில் இருந்து இதை செய்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications