For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா இப்படி குண்டாகிட்டே போனால் என்னதான் தீர்வு...?

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று உலக மக்கள் தொகை தினம்...இந்தியாவின் நிலை என்ன?- வீடியோ

    சென்னை: உலகிலேயே அதி வேகமாக மக்கள் தொகை உயரும் நாடுகளில் முக்கியமான இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆறு ஆண்டுகளிலேயே சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் மிகத் தீவிரமாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது தீவிரமாக செயல்படுத்தப்படுவதில்லை. இதனால்தான் இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கிறது.

    இந்தியாவில் தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஆனால் வட மாநிலங்களில் இந்த விஷயத்தில் மோசம் என்கிறார்கள்.

    உலக மக்கள் தொகையில் 16%

    உலக மக்கள் தொகையில் 16%

    உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலக நிலப்பரப்புடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பங்கு வெறும் 2.4 சதவீதம்தான். அப்படியானால் மக்கள் தொகை அடர்த்தியை கற்பனை செய்து பாருங்கள்.

    குறைய வேண்டும்

    குறைய வேண்டும்

    எனவே மக்கள் தொகையை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. இதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் மக்கள் தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பும், அக்கறையும், விழிப்புணர்வும் அவசியமாகிறது.

    மோசமான வாழ்க்கைத் தரம்

    மோசமான வாழ்க்கைத் தரம்

    மக்கள் தொகை தாறுமாறாக உயரும்போது ஒரு நாட்டின் தனி நபர் வருமானம் பாதிக்கப்படும். அதில் வளர்ச்சி இருக்காது. இதனால் தனி நபர் வாழ்க்கைத் தரம் மோசமாகவே இருக்கும். இது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

    மிக வேகமான உயர்வு

    மிக வேகமான உயர்வு

    இந்தியாவின் மக்கள் தொகையானது 1900களில் 28 கோடி அளவில்தான் இருந்தது. ஆனால் இன்று 135 கோடி என்ற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 50களுக்குப் பிறகுதான் இந்தியாவில் மக்கள் தொகை வேகமாக உயர ஆரம்பித்தது. 60களில் இது 24.8 சதவீத உயர்வைக் கண்டது.

    என்ன கஷ்டம்

    என்ன கஷ்டம்

    இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இவ்வளவு அதிக மக்கள் தொகை இருப்பதால் அனைவருக்கும் தேவையானதை செய்வது மிக பெரிய சவாலாகி விடுகிறது. இதனால்தான் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து அரசுகள் கடும் அக்கறை காட்டுகின்றன.

    English summary
    India is the second most populated country in the world behind China and in the next six years - by 2024 - India would surpass China. High population is a problem about which successive governments have been aware and it is not that steps aren't being taken to address it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X