மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்தது எப்படி? அதிகாரிகள் குழு ஆய்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய மதுரை தீவிபத்து குறித்த காரணத்தை கண்டுபிடிக்க 12பேர் கொண்ட நிபுணர் குழு கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், கிழக்கு ராஜ கோபுரம் அருகே, ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் 86க்கும் மேற்பட்ட கடை இயங்கி வருகின்றன. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோயில் ஊழியர்கள் இதுகுறித்து பாதுகாப்பு போலீசாரிடம் கூறினர்.

Investigating Team in Madurai Meenakshi Amman Temple

திடீர்நகர் தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறையினர் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. மேலும் சில பகுதிகள் தீ விபத்தால் இடிந்து விழுந்தன. இதனால் கோவிலின் ஒருபகுதி சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த தீவிபத்து குறித்த காரணத்தை கண்டறிய 12பேர் கொண்ட நிபுணர்கள் குழு கோயிலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வுக்கு பின்னர் கோயிலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Investigating Team inspects the Madurai Meenakshi Amman Temple. Due to the fire accident a part of temple is demolished. Officers are inspecting the spot to find the reason for the fire

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற