திராவிடர்களை அழிக்கப் போகிறாரா ரஜினி?.. தினகரன் திடுக் கேள்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆன்மீக அரசியல் என்கிறார் ரஜினிகாந்த். அப்படியானால் திராவிடக் கட்சிகளை அழிக்கப் போகிறார்களா, திராவிடர்களை அழிக்கப் போகிறார்களா என்று டிடிவி தினகரன் அதிரடியாக கேட்டுள்ளார்.

சமீப காலமாக தினகரனும் திராவிடம் குறித்துப் பேசி வருகிறார். பெரியார் குறித்தெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார். மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு பெயருக்கு மட்டுமே. இந்த அரசு யாருடைய பிரச்சனையை பற்றியும் இந்த அரக்கு கவலையில்லை. இதில் போக்குவரத்து ஊழியர்கள் விதிவிலக்கல்ல.

Is Rajinikanth going to demolish the Dravidian parties?, asks Dinakaran

ரஜினியின் ஆள்மீக அரசியல் என்பது, இது திராவிட நாடு. திராவிட கட்சிகளை அழிக்க போகிறீர்களா. திராவிடர்ளை அழிக்க போகிறார்களா?. கமல்ஹாசன் டுடிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மட்டும் அரசியல் நடத்திட முடியாது. கமல் விரக்தியோடு பேசுகிறார், ஆர்கே நகர் தேர்தலை கூட நேரில் பார்க்கவில்லை கமல், தலைவர் என்பது கட்சியில் மட்டும் இருக்கலாம்,

கார்பரேட் கம்பெனிகள் ஐல்லிக்கட்டை வியாபார நோக்கில் செயல்படுகிறது. ஐல்லிக்கட்டு என்பது கிராம பாரம்பரிய விளையாட்டு. அதை வியாபாரமாக ஆக்க கூடாது.

பங்காளி சன்டை மட்டுமே அமைச்சர்களுக்கும் எங்களுக்கும். என் தொகுதியின் வளர்ச்சியை கேட்டு பெறுவேன். இல்லையென்றால் ஐனநாயகப்படி போராடி பெறுவேன்.

உயர் நீதிமன்றம் இன்று சிலை வழக்கில் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. இந்த அரசு ஒரு மாதம் அல்ல, ஆறு மாதத்திற்கு முன்பே செயலிழந்து விட்டது. சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது அத்துமீறும் செயலை மத்திய அரசு கேட்க வேண்டும் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran has asked Rajinikanth what is his plan for the state and questioned his speech on Spiritual Politics. He met the press in Madurai this evening.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற