ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் லாக்கரை திறந்து ஐடி அதிகாரிகள் சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் லாக்கரை திறந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவிற்கு நெருக்கமாக இருக்கும் பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 190 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

IT department checks in Jaya Tv General manager locker

ஈக்காட்டுதாங்களில் இருக்கும் ஜெயா டிவி அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சசிகலா உறவினர் விவேக் இதை நிர்வகித்து வருகிறார்.

இன்றும் 4வது நாளாக போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில் விவேக்கிற்கு நெருக்கமானவரும் ஜெயா டிவியின் பொதுமேலாளருமான நடராஜன் வீட்டிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

காலையில் இருந்து அங்கு பல அதிகாரிகள் குழுமி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சோதனையில் அவரது பர்சனல் லாக்கரை திறந்து அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர். அதில் இருந்து ரகசிய தகவல்கள் பலவற்றை அவர்கள் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT department has raided in Jaya Tv General manager Natrajan house and his office. They are checking in Natrajan personal locker

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற