தினகரனின் பண்ணை வீட்டில் சென்சார் மூலம் சோதனை... மண்ணுக்குள் புதைத்திருக்கலாம் என சந்தேகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்சார் கருவி மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பொம்மையார்பாளையத்தில் தினகரனுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு விவசாயத் தோட்டம், மாட்டுப் பண்ணை என உள்ளது. இங்கு தினகரன் ஏதாவது பதுக்கி வைத்திருக்கலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

IT officials raid using Sensor in TTV Dinakaran's farm house

அப்போது பண்ணை வீட்டில் உரம், சாணியும்தான் இருக்கும் என்று தினகரன் நக்கல் அடித்தார். இந்நிலையில் தற்போது அவரது பண்ணை வீட்டில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது.

மண்ணிற்குள் ஏதேனும் புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சென்சார் கருவி மூலம் சோதனை நடத்தப்படுகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் நாளை சட்டசபை கூடவுள்ள நிலையில் தினகரன் ஏதேனும் புயலை கிளப்பலாம் என்பதால் அவரது வாயை அடக்கவும், கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Income tax sleuths searches using Sensor in TTV Dinakaran's farm house which is situated in Pondicherry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற