சசிகலாவுக்கு ஜோதிடம் பார்த்த ஜோதிடர் வீட்டையும் விட்டு வைக்காத ஐடி அதிகாரிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிகலாவுக்கு ஜோதிடம் பார்த்த ஜோதிடரை கூட ஐடி அதிகாரிகள் விட்டு வைக்காமல் ரெய்டுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கடலுார் நகரிலுள்ள திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதி நகரில், சந்திர சேகர் என்ற ஜோதிடர் வசித்து வருகிறார். இவர் ஜோதிடம் வெகு பிரசித்தி.

IT officials raids in Sasikala Astrologer house

எனவே, இவரை தேடி சென்ற அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு மட்டுமே ஜோதிடம் பார்த்து வந்துள்ளார் சந்திரசேகர்,

இதேபோலத்தான், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஜோதிடம் பார்த்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரசேகர் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று ரெய்டு நடத்தினர். 5 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை, 5 மணிக்கு திடீரென அங்கு சென்று சோதனைகள் நடத்தினர்.

சசிகலா தொடர்புள்ள பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சில தகவல்கள் கிடைத்ததால் ஜோதிடர் வீட்டுக்கு சென்று ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரெய்டுகளால், பிரபலங்களுக்கு ஜோதிடம் பார்ப்பதும் தப்பா என்று ஜோதிடர்கள் நொந்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT officials don't even spare Astrologer to whom Sasikala visit often .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற