ஜாஸ் சினிமாஸ் கை மாறியது எப்படி? விற்பனையா? குத்தகையா? விளக்கம் தர விவேக்குக்கு ஐடி உத்தரவு

Written By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாஸ் சினிமாஸ் கை மாறியது எப்படி என்பது குறித்து 2 நாட்களில் விளக்கம் தர விவேக்குக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியுள்ள சசிகலாவின் அண்ணன் மகன் விவேக், தமது வீட்டில் இருந்த ஆவணங்கள், நகைகள் குறித்து மட்டுமே அதிகாரிகள் கேட்டதாக கூறினார். அதிகாரிகள் எப்பொழுது கேட்டாலும் உரிய விளக்கம் தரப்படும் எனவும் விவேக் கூறியிருந்தார்.

vivek

இந்நிலையில் ஜாஸ் சினிமாஸ் குறித்து விவேக் 2 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவில், ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகள் கைமாறியது எப்படி?

ஜாஸ் சினிமாஸுக்கு 11 திரையரங்குகளும் விற்பனை செய்யப்பட்டனவா? அல்லது குத்தகைக்கு விடப்பட்டனவா? என்பது குறித்து விவேக் விளக்கம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜாஸ் சினிமாஸுக்கு திரையரங்குகள் விற்பனை செய்தது தொடர்பாக சத்யம் நிறுவனமும் ஆவணங்களைத் தாக்க செய்யவும் வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Income Tax officials sent a notice to Vivek on Jazz Cinemas.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற