சசிகலா குடும்பத்தை கூண்டோடு வளைத்த வருமான வரித்துறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மன்னார்குடியில் உள்ள சசிகலா குடும்பத்தினரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

IT Raid at Sasikala family houses in Mannarkudi

2 வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விசாரணை முடிந்த நிலையில் டி.டி.வி. தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி சுந்தரகோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

கீழதிருப்பாலக்குடியில் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும், அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் உள்ள டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் யாரும் செல்ல முடியாத வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

தஞ்சையில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் வேலு கார்த்திக்கேயன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax raids at TTV Dinakaran, Vivek, Ilavarasi, JayaTV office and Jazz cinemas.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற