ஜோயாலுக்காஸ் நகைக்கடையில் திடீர் ஐடி சோதனை.. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ரெய்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஜோயாலுக்காஸ் நகைக்கடையில் திடீர் வருமான வரி சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைக்கு சொந்தமாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருக்கும் பத்து கிளைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது.

IT raid in Chennai Joyalukkas Jewellery

இந்த நிலையில் தற்போது ஜோயாலுக்காஸ் நகைக்கடையில் திடீர் வருமான வரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை தியாகராய நகரில் உள்ள ஜோயாலுக்காஸ் கடையில் சோதனை தொடங்கி இருக்கிறது.

அதன்பின் தமிழகம் மற்றும் கேரள முழுக்க இருக்கும் அந்த கடையின் 10 கிளைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கி இருக்கிறது.

மேலும் ஜோயாலுக்காஸ் கடை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலக்கத்திலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு வேலை பார்க்கும் முக்கிய அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடக்கிறது.

தொடர்ந்து வரி ஏய்ப்பு புகார்கள் வந்த காரணத்தால் இந்த வருமான வரி சோதனை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT raid in Chennai Joyalukkas Jewellery. Income tax officials raid in T Nagar Joyalukkas Jewellery shop from morning. Income tax officials raids in Joyalukkas owner's house and office also.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற