For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழு

அரசு ஊழியர்கள் போராட்டத்தை அக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தை அக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்பு குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை இன்று சந்தித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

Jacto geo opposition team members met Chief minister Edappadi Palanisami in the assembly

அப்போது தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் அவர்கள் தெரிவித்தனர்.

முதல்வரை சந்தித்த போது பழைய ஓய்வூதியம் தொடர வலியுறுத்தியதாகவும் அவர்கள் கூறினர். மேலும் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜாக்டோ ஜியோ போராட்ட எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பின் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

English summary
Jacto geo opposition team members met Chief minister Edappadi Palanisami in the assembly. They warned that if the government did not fulfill the promise, the fight would take place after October 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X