For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா - அருண் ஜெட்லி திடீர் சந்திப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா சந்தித்து விட்டு போயஸ்கார்டனை விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

Jaitley calls on Jayalalithaa in Chennai

அதேசமயம் லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்களின் ஒத்துழைப்பு பற்றி பேசுவதற்காகவே ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவிற்கு லோக்சபாவில் 37 எம்.பிக்களும், ராஜ்யசபாவில் 11 எம்.பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, தீர்ப்பு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Union Finance Minister Arun Jaitley today met AIADMK chief J Jayalalithaa in Chennai. The meeting lasted nearly 40 minutes at her Poes Garden residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X