For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பாஜக பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நியமித்து கட்சியின் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்படுள்ளார்

Javadekar BJP's poll incharge for tamilnadu

இதேபோல கேரள மாநிலத்தின் பொறுப்பாளராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நாடா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பாஜகவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அக்கட்சியனரால் கருதப்படுகிறது. எனவே கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்தது. அதற்காக இரண்டு குழுக்களாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் என பேச்சுவார்த்தையில் இறங்கின. ஆனால் பெரிய கட்சியிலிருந்து இன்னும் சரியான சிக்னல் கிடைக்காததால் தமிழக பாஜகவினர் கொஞ்சம் களக்கத்தில் உள்ளனர்.

English summary
Union ministers J P Nadda and Prakash Javadekar were today appointed BJP's election in-charge for the poll-bound states of Kerala and Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X