For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கட்டட விபத்துக்கு யார் காரணம்?.. விசாரணைக் கமிஷன் அமைத்து ஜெ. உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடிகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணைக் கமிஷனை முதல்வர் ஜெயலலிதா அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடக்க யார் காரணம், யாருடைய அலட்சியப் போக்கு காரணம் என்பது குறித்து இந்த ஆணையம் விசாரணை நடத்தும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

Jaya orders for probe commission into the Chennai building collapse

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்ததையடுத்து, எனது உத்தரவின் பேரில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணிகளும், காயமடையத தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 27 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயதத் துயரச் சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்து விட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்யதவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாயும், வெளி மாநிலங்களைச் சேர்யதவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டதோடு, உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டேன்.

மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதோடு, அவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை 29.6.2014 அன்று நேரில் பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறி, நிவாரண உதவியினையும் நான் வழங்கினேன். இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், நீதியரசர் சு. ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தினை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விசாரணை ஆணையம்,

1. 28.6.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடியது விழுந்ததன் விளைவாக 55 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான அனைத்து அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள்;

2. பல கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கும், படுகாயம் அடைந்ததற்கும் காரணமான இந்தத் துயரச் சம்பவம் யாருடைய அலட்சியப் போக்கினால் நடந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு பொறுப்பானவர்களை முடிவு செய்தல்;

3. இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில், கடைபிடிக்க வேண்டிய தீர்வு முறைகளை பரிந்துரை செய்தல்; ஆகியவற்றை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையினை அளிக்கும்.

விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் எனது தலைமையிலான அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalitha has ordered for probe commission into the Chennai building collapse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X