For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சத்தீவு விவகாரம்: சட்டசபையில் ஜெ- ஸ்டாலின் கார சார விவாதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது என முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான் என்றும் மீனவர்கள் படும் துயரத்திற்கு தி.முக தான் காரணம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதம் ஆரம்பம் முதலே காரசாரமாக நடைபெற்று வருகிறது.

1991ல் கூறியபடி கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார். பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்று கூறினார்.

Jaya, Stalin indulges in deep debate on Kachatheevu

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க கருணாநிதி ஏன் அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் படும் துயரத்திற்கு திமுக தான் காரணம். எதிர்க்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகதான். கச்சத்தீவு குறித்த பேச திமுகவுக்கு அருகதை கிடையாது என்று ஆவேசமாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கச்சத்தீவ மீட்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் திமுக இணைத்து கொள்ளாதது ஏன்? அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கச்சத்தீவு தொடர்பான வழக்கில் அரசு இணைத்து கொள்ளப்பட்டது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்க தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் கச்சத்தீவு விவகாரம் சட்டசபையில் ஜெயலலிதா, ஸ்டாலின் இடையே கார சார விவாதம் நடைபெற காரணமாக அமைந்தது.

English summary
CM Jaya and MK Stalin indulged in a deep debate on Kachatheevu in the assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X