சென்னையில் ஜெயா டிவி டிரைவர் சரவணன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயா டிவியின் கார் ஓட்டுநர் சரவணன் அசோக் நகரில் உள்ள ஒரு கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஜெயா டிவியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் அசோக். இவர் அசோக் நகரில் ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

Jaya TV Car driver mysterious death in Chennai

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக இறந்து வருவது பரபரப்பைக் கூட்டுவதாக அமைந்துள்ளது.

ஜெயா டிவியின் முன்னாள் துணை தலைவராக இருந்த சசிகலாவின் உறவினர் ரெங்கநாதனுக்கு கார் ஓட்டியவர் சரவணன். கடந்த 6 ஆண்டுகளாக ஜெயா டிவியில் பணிபுரிந்து வந்தார் சரவணன்.

2011ல் ஜெயலலிதாவால் ஜெயா டிவியில் இருந்து ரெங்கநாதன் வெளியேற்றப்பட்டார். ஜெயா டிவியின் துணை தலைவர்களாக இருப்பவர்களுக்கு கார் ஓட்டி வந்தார் சரவணன். நேற்று முன்தினம் இரவு 8 மணிவரை நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த சரவணன் திடீரென மர்மமான முறையில் உயிரிந்துவிட்டார்.

சென்னை கோடம்பாக்கம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார். இவரது இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் பகுதியில் சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து சரவணன் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jaya TV's car driver Saravanan died mysteriously. His body was recovered from Well in Ashok Nagar, Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற