பல மாநிலங்கள், பல நகரங்கள்.. நாட்டின் மிகப்பெரிய ஐடி ரெய்டு இதுதான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயா டிவி உட்பட 187 இடங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டு சமீபத்தில் நடைபெற்றதிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை ரெய்டு என்று கூறப்படுகிறது.

'ஆபரேசன் கிளீன் மணி' என்ற பெயரில் சுமார் 1800 அதிகாரிகள் இந்த ரெய்டில் ஈடுபட்டனர். ஜெயா டிவி ஆபீசில் 10 அதிகாரிகள் சோதனையிட்டனர். மற்ற இடங்களிலும் சராசரியாக 10 முதல் 12 அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டனர்.

Jaya TV IT raid involved 1,800 officials and was biggest in recent times

போலி நிறுவனங்களை கணக்கெடுத்ததன் மூலம்தான் இந்த முறைகேடுகளும் அம்பலத்திற்கு வந்ததாகவும், எனவே அதிரடி ரெய்டு நடைபெற்றதாகவும் ஐடி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த ரெய்டுதான் சமீபத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டுகளிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. 2வது நாளாக இன்றும் பல பகுதிகளில் ரெய்டுகள் நடக்கின்றன.

சென்னை, மன்னார்குடி, பெங்களூர், ஹைதராபாத், புதுச்சேரி என இந்த ரெய்டு பல பகுதிகள், பல மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால், சமீபத்தில் நடந்த பெரிய ஐடி ரெய்டு இது என கூறப்படுகிறது.

எனவே, எப்படியும், எதிர்தரப்புக்கு எதிராக பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள். ஒருவேளை ஆதாரங்கள் கிடைக்காவிட்டால் அது, சசிகலா தரப்பிற்கு அரசியல் மைலேஜை கொடுக்கத்தான் வாய்ப்புள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The raids conducted on Jaya TV and 187 places was probably one of the biggest operations carried out by the Income Tax Department in recent times. Raids took place simultaneously at 187 locations at Tamil Nadu, Andhra Pradesh, Delhi and Bengaluru.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X